புனே: மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான AW 139 வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் பவுட் என்ற கிராமத்தில் விழுந்து விபத்து விபத்துக்குள்ளானது. மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. விபத்தைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் ஆனந்த், டெய்ர் பாட்டியா, அமர்தீப்சிங், எஸ்.பி.ராம் ஆகியோர் காயம் அடைந்தனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.