திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தா.கிறிஸ்டி (எ) அன்பரசு தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் பா.சிட்டிபாபு, ஒன்றிய அவைத் தலைவர் பட்டரை கே.பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தா.மோதிலால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திண்ணை பிரச்சார கூட்டங்கள் மற்றும் அணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திண்ணை பிரச்சார கூட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட திமுக அறிவித்தபடி வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு நெமிலியகரம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு பாண்டுர் ஊராட்சியிலும், 6 மணிக்கு பட்டரை பெரும்புதூர் ஊராட்சி வரதாபுரம் கிராமத்திலும், இரவு 7 மணிக்கு எல்லப்ப நாயுடுபேட்டை ஊராட்சியிலும் திண்ணை பிரசார கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.அதேபோல் அணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திண்ணை பிரச்சார கூட்டங்களை இளைஞரணி சார்பில் தோமூர் ஊராட்சியிலும், வழக்கறிஞர் அணி சார்பில் குன்னவலம் ஊராட்சியிலும், மாணவரணி சார்பில் ராமஞ்சேரி ஊராட்சியிலும், சுற்றுச்சூழல் அணி சார்பில் பூண்டி ஊராட்சி மற்றும் ராமதண்டலம் ஊராட்சியிலும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கானூர் ஆனந்த், ஒன்றிய துணைச் செயலாளரும், பூண்டி ஊராட்சி தலைவருமான சித்ரா ரமேஷ், பொருளாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், டில்லிபாபு, சௌகார் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வி.எஸ்.சதீஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் லிங்கேஷ்குமார், எழிலரசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி நிர்வாகி குணசேகரன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகி தனசேகர், கௌதம், ஹேமந்த் மற்றும் ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.