தேவையானவை :
வெள்ளைப் பூசணிச் சாறு (அரைத்து வடி கட்டியது) – 200 மி.லி.,
முந்திரிப் பருப்பு – 50 கிராம்,
வெள்ளரி விதை – 50 கிராம்,
பூசணி விதை – 50 கிராம்,
ஏலக்காய் – 10,
பனங்கல்கண்டு – தேவைக் கேற்ப,
நெய் – 1 டீஸ்பூன்,
தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
முந்திரி, வெள்ளரி விதை, பூசணி விதை, ஏலக்காயை தனித் தனியே வறுத்துப் பொடித்து வைக்கவும். பூசணிச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். பாதியாகச் சுண்டியதும், அதில் பொடித்து வைத்து ள்ளதைச் சேர்த்து, நெய் விட்டு, பனங் கல்கண்டு சேர்த்துக் கிளறவும். அல்வா பதத்துக்கு நன்கு சுருண்டு வந்ததும், தேன் கலந்து பரிமாறவும்.