சென்னை: புலவர் செந்தலை ந.கவுதமனின் துணைவியார் உலகநாயகி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரங்கல் செய்தி: பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந.கவுதமனின் துணைவியார் உலகநாயகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன். பகுத்தறிவும், தமிழும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த உலகநாயகியை இழந்து வாடும் செந்தலை ந.கவுதமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், பெரியார் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.