புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு இலவசமாக மேல்முறையீடு விண்ணப்பம் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.