புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி துரையின் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகேசனை, ரவுடி துரையின் மனைவி மிரட்டிய வழக்கில் போலீசார் விசாரணை செய்யச் சென்றபோது பணம் பறிமுதல் செய்யப்பட்டது.ரவுடி துரையின் திருச்சி வீட்டில் ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் இருந்ததாக வருமான வரித்துறைக்கு போலீஸ் தகவல் தெரிவித்தது. போலீஸ் தகவலின் அடிப்படையில் ரவுடி துரையின் திருச்சி வீட்டில் ரூ.10 லட்சத்தை ஐ.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.