புதுக்கோட்டை ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் விவகாரத்தில் போலீஸார் விளக்கம் அளித்துள்ளது. ஆலங்குடி அருகே காட்டுப்பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுத்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர். ரவுடி துரைசாமி போலீசாரை நாட்டு துப்பாக்கியால் சுடமுயன்ற நிலையில் ஆய்வாளர் சாதுரியமாக தப்பினார். மேலும் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரைசாமி காயமடைந்தார். ரவுடி துரைசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்
128
previous post