தூத்துக்குடி : பெண்களின் முன்னேற்றத்திற்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்குமான ஆட்சிதான் திமுக ஆட்சி என புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி கூறினார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி எம்பி, அமோக வெற்றி பெற்று, 2வது முறையாக எம்பி ஆனார். இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, புதுக்கோட்டை, குமாரகிரி ஊராட்சிக்கு வந்த கனிமொழி எம்பிக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில், மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டு கட்சி கொடியேற்றினார். பின்னர் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் உரிமைக்களுக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
பள்ளியில் குழந்தைகள் ஆரோக்கியமாக படிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல்முதலாக காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு. ஒன்றிய அரசு நாட்டிற்கு எதிராக செயல்படுத்த முற்படும் திட்டங்கள், சட்டங்களை ஆரம்பத்திலேயே எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எதிர்த்து வருகின்றனர். அதேபோல் தான் இங்கு நான் வந்ததும் அக்னிபாத் திட்டம் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினீர்கள். இந்த திட்டத்தையும் ஆரம்பம் முதல் இன்றுவரை ராகுல்காந்தியும், முதலமைச்சரும் எதிர்த்து வருகின்றனர். ஒன்றிய பாஜ அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது என்றார்.
தொடர்ந்து, வடக்கு, தெற்கு சிலுக்கன்பட்டி, கூட்டுடன்காடு, குமாரகிரி, தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், கூட்டாம்புளி, முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், அணியாபரநல்லூர், மூலக்கரை, பேரூரணி, திம்மராஜபுரம், அல்லிக்குளம், தளவாய்புரம், வர்த்தகரெட்டிபட்டி, செக்காரக்குடி, தெய்வச்செயல்புரம், வடக்கு காரசேரி, சிங்கத்தாகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, வட வல்லநாடு, கலியாவூர், நாணல்காடு, வசவப்பபுரம், முறப்பநாடு, புதுக்கிராமம், கோவில்பத்து, கீழபுத்தனேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கனிமொழி எம்பி நன்றி தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், செயற்குழு உறுப்பினர் மாடசாமி, பஞ்.துணைத்தலைவர் முப்பிலியன், அமைப்பாளர்கள் தெற்கு மாவட்ட விவசாய அணி வி.பி.ஆர்.சுரேஷ், தொண்டரணி வீரபாகு, இலக்கிய அணி ரகுராமன், மகளிர் சமூக வலைதள அமைப்பாளர் மீனாட்சி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் முடிவை ஆறுமுகம்,
அபிராமி, அன்னசெல்வி, சைமன், ஆறுமுகநயினார், சிறுபான்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், ஏஞ்சலின் ஜெனிட்டா, ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், வெயில்ராஜ்,கணேசன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் மரிய பொன்னம்மாள், இளைஞரணி சண்முகநாராயணன், வர்த்தக அணி பொன்செல்வின், வழக்கறிஞரணி மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், மகளிரணி வரலட்சுமி, முத்துலட்சுமி, விவசாய அணி ஜெகன், கிளைச்செயலாளர்கள் பால்ராஜ், செல்வம், ராஜ்குமார், ராஜா, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சேரந்தையன் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ரவிதாகூர், கப்பிக்குளம் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.