புதுச்சேரி: விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மழைக்காலத்தில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்க்கான மழைக்கால நிவாரணத்தொகை நவம்பரில் வழங்கப்படும். காரைக்காலில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ‘இந்திய உணவுக்கழகத்தில் அனுப்பப்படும் நெல்லிற்கு கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை தரப்படும். பேருந்து நிலையம் அருகே மகளிருக்கு இலவச விடுதிகள் கட்ட முடிவு செய்துள்ளது.