புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செல்போன் திருடப்பட்டுள்ளது. பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தனது ஆதரவாளர்களை சந்திக்க சென்றபோது திருட்டு நிகழ்ந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டே பேனர் வைப்பது தொடர்பாக அமைச்சர், எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். காரைக்காலில் ஏற்பட்ட மோதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் காயமடைந்து மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் கீழே கிடந்த செல்போனை எடுத்து வந்ததாக மர்மநபர் காவல்துறையிடம் தகவல்தெரிவித்துள்ளார்.