புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் நீர் திடீரென செம்மண் நிறத்துக்கு மாறியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு விதமான நிறங்களில் கடல்நீர் காட்சியளிக்கிறது. காந்தி சிலையில் இருந்து தலைமை செயலகம் வரையிலான கடற்பகுதி செந்நிறமாக மாறியது. ரசாயன கழிவுகள் கலந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடலுக்கு அடியில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக இதுபோன்று நிகழலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். திடீரென கடல் நிறம் மாறியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் திடீரென செம்மண் நிறத்துக்கு மாறிய கடல் நீர்; அதிகாரிகள் ஆய்வு..!!
81