புதுச்சேரி: புதுச்சேரி எம்எல்ஏக்கள் இன்று கோவாவுக்கு செல்ல உள்ளனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தலைமைச் செயலகத்துடன்கூடிய ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக சபாநாயகர் செல்வம் தலைமையில் 22 எம்எல்ஏக்கள் இன்று (30ம் தேதி) கோவா சென்று அங்குள்ள சட்டசபையை பார்வையிடுகின்றனர். இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறுகையில், ‘ஒருங்கிணைந்த முறையில் புதுச்சேரியில் புதிய சட்டசபை கட்டப்பட உள்ளது.
இதேபோல் ஒருங்கிணைந்த வசதிகள் கோவா சட்டசபையில் உள்ளது. எனவே அதனை புதுச்சேரி எம்எல்ஏக்கள் பார்வையிட்டு விபரத்தை கேட்டறிய உள்ளனர். இதற்காக கோவா புறப்பட்டு செல்கிறோம்’ என்றார். இப்பயணத்தை முடித்துக் கொண்டு ஓரிரு நாளில் எம்எல்ஏக்கள் புதுச்சேரி திரும்புகின்றனர். கடந்த 7 மாதத்தில் பல்வேறு இடங்களுக்கு புதுச்சேரி எம்எல்ஏக்கள் சுற்றுலா சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.