பெரம்பூர்: வியாசர்பாடி பி.பி.சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் போலீசார் அந்த பாரில் சோதனை செய்தபோது, புதுச்சேரி மதுபானங்கள் 6 புல் பாட்டில்கள் மற்றும் 3 பீர் உள்ளிட்டவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பார் ஊழியர்களான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாகமணி (42), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (26), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வெற்றிவேல் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். டாஸ்மாக் பொறுப்பாளர் மணிகண்டன், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து பணியாளர்களிடம் கொடுத்து விற்பனை செய்யும்படி கூறியது தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர்.