புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டில் பிறழ் சாட்சியம் அளித்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரை செய்துள்ளது. 2018ல் தனியார் நிறுவன விரிவாக்கத்துக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பேச்சுவார்த்தை நடந்தது. எதிர்ப்பு தெரிவித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்த போது மற்றொரு தரப்பினரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது திடீரென இரு தரப்பும் மோதிக் கொண்ட நிலையில் 55 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.