புதுச்சேரி: புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்ட திருத்தங்கள் ஒன்றிய அரசு மேற்கொள்வதால் ஜூலை 9ம்தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது என்று நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9ம்தேதி பந்த் போராட்டம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பந்த் போராட்டத்துக்கு பேருந்து, ஆட்டோ, டெம்போ மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் 9ம்தேதி பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்காது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் 9ம் தேதி பந்த்: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது
0
previous post