புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் காமராஜர் கல் வீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். காமராஜர் கல் வீடு திட்டத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது. அதையும் உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்கப்படும். புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும் என்பது நமது எண்ணம் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மேலும், புதுச்சேரியில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000-லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.