புதுச்சேரி: புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை பரிசீலித்து மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்