புதுச்சேரி: புதுச்சேரியில் 10ஆண்டுகளுக்குப் பிறகு பார்களுக்கான உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த கொள்முதல் மதுபான கடைகளுக்கு உரிமக் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை கொள்முதல் மதுபான கடைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டல், விடுதிகளில் விற்கப்படும் எஃப்.எல்-2 மதுபான கடைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலால்துறை மூலம் ரூ.275 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் 10ஆண்டுகளுக்குப் பிறகு பார்களுக்கான உரிமக் கட்டணம் உயர்வு!!
0
previous post