சென்னை: மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் 15 பேர் உதவி இயக்குநராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை அலுவலகத்தில் உதவி இயக்குநரான கலைநேசன் சென்னை பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவகத்தில் உதவி இயக்குநரான நடராஜன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தின் இணை இயக்குநராகவும், தமிழரசு அலுவல உதவி இயக்குநரான முகம்மதுரசூல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்தில் உதவி இயக்குநராகவும், திரைப்படத்துறையினர் நலவாரியத்தின் உதவி இயக்குநரான தீபா எரிசக்தி மேலாண்மை முகமை அலுவலகத்தின் உதவி இயக்குநராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநரான கோவலன் தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி அலுவலகத்தின் உதவி இயக்குநராகவும், பொருட்காட்சி பிரிவின் அலுவலராக பணிபுரியும் பாரதி தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அலுவலராகவும், போக்குவரத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரான சண்முகசுந்தரம் சேலம் மண்டலம்
அலுவலகத்தின் அலுவலராகவும், சுப்பையா தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் அலுவலராகவும்,
ஜெயஅருள்பதி திருநெல்வேலி மண்டல போக்குவரத்து கழகம் உதவி இயக்குநராகவும், செய்தி வெளியீட்டு பிரிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் முத்தமிழ்ெசல்வன் திரைப்படத்துறையினர் நலவாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராகவும், மக்கள் தொடர்பு அலுவலரான நவாஸ்கான் தூத்துக்குடி மண்டல போக்குவரத்து கழக உதவி இயக்குநராகவும், பாவேந்தன் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து கழக உதவி இயக்குநராகவும், சுவாமிநாதன் சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உதவி இயக்குநராகவும், தமிழ்செல்வன் சென்னை தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உதவி இயக்குநராகவும், உதயா கதிரவன் தமிழரசு அலுவலக உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.