Monday, April 15, 2024
Home » விளவங்கோடு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

விளவங்கோடு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

by Karthik Yash

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங். எம்எல்ஏ விஜயதரணி சமீபத்தில், பாஜவில் இணைந்தார். எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை, சட்டப்பேரவை தலைவருக்கு அனுப்பினார். காங். தலைவர் செல்வப்பெருந்தகையும், விஜயதரணியை கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி பேரவை தலைவருக்கு கடிதம் எழுதினார். விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு மூன்று நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசிதழில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடனேயே, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

8 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi