சென்னை: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை,தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருச்சி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.