புதுடெல்லி: பொது இடங்களை மாற்று திறனாளிகள் எளிதாக அணுகுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2017ல் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. பொது இடங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதா ராஜிவ் ரட்டூரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள்,பொது இடங்களில் மாற்று திறனாளிகளுக்கான அணுகல் தன்மையை மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளை அணுகல் தரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். அனைத்து புதிய உள்கட்டமைப்புகளும் மாற்றுதிறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்க வேண்டும். மேலும், மாற்று திறனாளிகள் அணுகல் தரநிலையை 3 மாதங்களுக்குள் கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.