குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள். அகரம்சீகூர் பஸ் நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் திருச்சி ஜெயங்கொண்டம் செந்துறை திட்டக்குடி உட்பட தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. வதிஷ்டபுரம், ரெட்டிக்குடிக்காடு அகரம்சீகூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கிருந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூர் சார்பதிவாளர் அலுவலகம் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் அரியலூர் பெரம்பலூர் திருச்சி கடலூர் செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள் மாணவ, மாணவிகள் இங்கிருந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் சாலையில் இருந்த நிழற்குடை சேதமடைந்ததால் அகற்றப்பட்டு விட்டது. தற்சமயம் பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் ஆகியோர் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அருகிலுள்ள கடைகளில் ஒதுங்கி நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.