புதுச்சேரி: பொதுமக்களுக்காக ஆளுநரும் – முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதே சிறந்த அரசாங்கம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளுநரும், முதலமைச்சரும் எதிரெதிராக இருக்கிறார்கள். ஆளுநரும், முதலமைச்சரும் இணக்கமாக செயல்பட்டால் தான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதற்கு புதுச்சேரி தான் உதாரணம் என்று தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரியில் முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் இணக்கமாக உள்ளோம்.
நள்ளிரவு 12 மணிக்கு கூட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நானும், முதலமைச்சரும் விவாதித்து உள்ளோம். புதுச்சேரி செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோதும் முதல்வருடன் ஆலோசித்தேன் என்று குறிப்பிட்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரி வருகையையொட்டி முதல்வர் ரங்கசாமியுடன் தமிழிசை ஆலோசனை செய்தார்.