சென்னை: பொதுத்தேர்வு மார்ச் மாதம் 3ம் தேதி ெதாடங்க உள்ளதை அடுத்து, அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: பொதுத்தேர்வு என்றால் மாணவ மாணவியர் இடையே பொதுவாக ஒரு அச்சம், பதற்றம் இருக்கும். எந்த வகுப்பு மற்றும் எந்த பள்ளியில் படித்தீர்களோ அதே வளாகத்தில் அதே இடத்தில் தான் மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். அதனால் அவர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. மேலும் நீங்கள் படித்த பாடங்்களில் இருந்து தான் கேள்விகள் இடம் பெறும். அதற்கான விடைக்குறிப்புகளும் அதில் உள்ளவைதான். தேர்வு அச்சம் இன்றி மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ள வேண்டும்.
பாலியல் தொடர்பானவற்றை உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். இதில் ெதாடர்புடைய அதிகாரிகளின் கல்விச் சான்று ரத்து செய்யப்படும். பள்ளி அதிகாரிகளாக இருந்தால் 10, 12 பள்ளி சான்றுகளும், உயர்கல்வியாக இருந்தால் அதன் சான்றுகளும் ரத்து செய்யப்படும். மேலும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. பாலியல் தொடர்பான புகார்கள் தவிர தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான தகவல்களையும் 14417 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இந்த புகார் மையத்தில் 65 பணியாளர்கள் இரவு பகலாக 24 மணி நேரம் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் மார்ச் 1ம் தேதி புதிய மாணவர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.