சென்னை: பொதுநிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி தந்தால் சாலை விபத்துகள் அதிகரிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மதுபான விதி திருத்தத்தால் மோசமான சமுதாய சீரழிவு ஏற்படும்; விபத்துகளால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும். திருமணம், விளையாட்டு நிகழ்வுகளில் மதுவிநியோகிக்க அனுமதி தரும் ஆணையை திரும்பப்பெறவும் வலியுறுத்தியுள்ளார்.