புதுடெல்லி: தெலங்கானாவில் இந்த ஆண்டில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சி தலைவர் சந்திரசேகரராவ் முயன்று வருகிறார். கர்நாடகா சட்ட பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து தெலங்கானா காங்கிரசார் ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளனர். சமீபத்தில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 35 பேர் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜூப்பள்ளி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்எல்ஏ குருநாத ரெட்டி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.