சென்னை: 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.