டெல்லி: என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம். 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பின்படி சமூகநீதியை நிலை நாட்டுவோம். நேரடி நியமனம் தொடர்பான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.