சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடலில் மீன் பிடிப்பது மட்டுமே வாழ்வாதாரம் என்ற வாழ்க்கை நிலையில் உள்ள கடலோர மீனவக் கிராமங்கள் அனைத்தும் கடுமையான வேதனையிலும், பாதுகாப்பற்ற பரிதவிப்பிலும் வாழ்ந்து வருகின்றன. தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், நாட்டின் பிரதமர், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் மீனவர் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்ய தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்களது உடமைகளுடன் நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.