Monday, March 4, 2024
Home » சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

by Suresh

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு விதித்த 3 ஆண்டு கிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு டிச.21ம் தேதி உயர்நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவித்தது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு தண்டனை அறிவித்த நேரத்தில், மேல்முறையீட்டு செய்வதற்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பற்றட்டுள்ளது என மேல்முறையீட்டு மனுவில் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

twelve − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi