புதுடெல்லி: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அசையா சொத்துக்களின் சட்டப்பூர்வ ஆவணமாக பதிவு ஆவணங்கள் உள்ளன. எனவே பதிவு செயல்முறை வலுவானதாகவும், நம்பகமானதாகவும், வளர்ந்து வரும் சமூக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
இந்த தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப பதிவு மசோதா 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து பொதுமக்கள் வரும் ஜூன் 25ம் தேதிக்குள் sanand.b@gov.in என்ற மின்னஞ்சலில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.