தென்காசி: மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டை ஊக்குவிக்க ரூ.160 கோடி செலவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒன்றிய இணைஅமைச்சர் எல்.முருகன் பேசினார். தென்காசியை அடுத்த ஆய்க்குடி அமர் சேவா சங்கத்திற்கு நேற்று வந்த ஒன்றிய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சோலார் பவர் சிஸ்டம் மற்றும் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
ரூ.160 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. 2014 முதல் 2019 வரை மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் தற்போது சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது’ என்றார். முன்னதாக அமைச்சர் அமர் சேவா சங்கத்தை சுற்றிப்பார்த்து குழந்தைகள் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.