வால்பாறை : வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை 2 அல்லது 3 மாதங்களுக்கு பெய்வது வழக்கம்.
நடப்பாண்டில் மே இறுதி வாரத்தில் தென்மேற்கு பருவமழை கனமழையுடன் தொடங்கியது. இதன் காரணமாக தரை மட்டத்தில் இருந்த சோலையார் அணை 101 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் சில தினங்கள் வரை ஒரு வாரம் வெயில் நிலவியது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மூடுபனி மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. எனவே தலநார் நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளில் மீண்டும் நீர் வரத்து சற்று உயர்ந்து காணப்படுகிறது.
மழை நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர் நிலை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வால்பாறை தாசில்தார் மோகன் பாபு வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தீயணைப்பு, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.