Wednesday, February 28, 2024
Home » பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு..!!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

லக்னோ: பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி அயோத்தி சென்றடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி வாகன பேரணியாக சென்று வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை சாலை மார்க்கமாக வாகன பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர்களை தூவி பிரதமர் மோடியை தொண்டர்கள் வரவேற்று வருகின்றனர். ஜனவரி 22ல் ராமர் கோயில் திறப்பையொட்டி அயோத்தியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் மோடி அயோத்தி சென்றடைந்தார். காரில் நின்றவாறு மக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்து வருகிறார். அயோத்தி சர்வதேச விமான நிலையம், ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.

அதிநவீன விமான நிலையம், மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை தொடங்கி வைக்கிறார். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். கோவை – பெங்களூரு உட்பட 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே சென்னை – நெல்லை, சென்னை – கோவை, சென்னை -மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அயோத்தியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் 2 அம்ரித் பாரத் ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்.

 

You may also like

Leave a Comment

11 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi