சென்னை: திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள்; அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும்; நலத்திட்டங்களை முழுமையான ஈடுபாட்டுடன் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களின் விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்ய வேண்டும்; காலை உணவு திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்