சென்னை: திட்டங்களை கண்காணித்தால்தான் அவை தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திட்டங்களை கண்காணித்தால்தான் அவை தொய்வின்றி நடைபெறும். இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை. 3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் திஷா ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசியுள்ளார்.