Thursday, June 13, 2024
Home » திமுக எம்பி கதிர்ஆனந்துக்கு எதிரான பினாமி சட்ட நடவடிக்கை மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

திமுக எம்பி கதிர்ஆனந்துக்கு எதிரான பினாமி சட்ட நடவடிக்கை மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

by Ranjith

சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது வருமான வரித்துறையினர் வேலூர் தொகுதி திமுக வேட்பாளரும் தற்போதைய எம்.பியுமான கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். இதில், தாமோதரன்-விமலா தம்பதியர் வீட்டில் நடத்திய சோதனையில் 11 கோடியே 48 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த தொகையை கதிர் ஆனந்துக்கு சொந்தமானது எனக் கூறி அவருக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக மே 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பினாமி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி கதிர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து கதிர் ஆனந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீசரண் ஆஜராகி, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கில் கதிர் ஆனந்தை இணைத்துள்ளனர். பறிமுதல் பணத்திற்கும், கதிர் ஆனந்துக்கும் தொடர்பு இல்லை. எனவே, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மே 31ம் தேதி மனுதாரர் அல்லது அவருடைய வழக்கறிஞர் விசாரனை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். அந்த விசாரணையில் 8 வாரங்களுக்கு எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்ககூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3வது வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi