கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகருக்கு மிக அருகே உள்ள கரடிச்சோலை வனப்பகுதி மற்றும் அங்குள்ள அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
இவர்கள் தடை செய்யப்பட்ட கரடிச்சோலை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், புகைப்படமும் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வனத்துறையினர் கரடிச்சோலை வந்தனர். அங்கு தடையை மீறி சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் 14 பேரையும் பிடித்து தலா ரூ.1000 வீதம் ரூ.14,000 அபராதம் விதித்தனர்.