சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மக்களவை உறுப்பினராக பதவியேற்றதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு உற்ற துணையாக இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
வயநாடு எம்பியாக பதவியேற்ற பிரியங்கா காந்திக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
0