செங்கல்பட்டு: தனியார் பள்ளி வாகனம் மீது மோதி சொகுசு கார் விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பொத்தேரி அருகே தாம்பரம் மார்க்கமாக அதிவேகமாக சொகுசு கார் வந்து கொண்டிருந்தது அப்போது, முன்னாள் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதில், கார் பேருந்து மீது பயங்கரமாக மோதி, தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், சொகுசு காரை ஓட்டி வந்தவர் கெவின் (19) என்பதும், இவர் தாம்பரத்தில் பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.