சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிக்குலேஷன் என்ற பெயரை நீக்கி, தனியார் பள்ளி என்று பெயர் வைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வேமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, குறிப்பிட்ட முறையில் கொள்கை முடிவு எடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நிபுணர்கள் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.