Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தனியார் மருத்துவமனை அதிகாரியுடன் நைட்ஷோ அதிமுக பிரமுகரின் மகள் கழுத்தை நெரித்துக்கொலை: பிரேதப் பரிசோதனையில் ‘திடுக்’

சேலம்: சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி (34). திருமணமாகாதவர். இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிஇ பட்டதாரியான பாரதி, சங்கர் நகர் பகுதியில் டியூஷன் சென்டரில் பணியாற்றி வந்தார். அங்கேயே தங்கிக்கொள்வார். இவரது நண்பர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் (49). இவர் தனியார் மருத்துவமனை உயர் அதிகாரி. நேற்றுமுன்தினம் நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும், உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கியிருந்த அறையில் உதயசரணும் தங்கி உள்ளார்.

அப்போது பாரதி சிகரெட் பிடித்தபடி மயங்கிவிட்டாராம். உடனடியாக உதயசரண் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு பாரதியை கொண்டு சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாரதி சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாரதியின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கின் மீது ரத்த காயமும், நெஞ்சு பகுதியில் வீக்கமும் இருந்தது தெரியவந்தது.

இதனால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உதயசரணிடம் விசாரித்ததில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் தாக்கியதாகவும் கூறியுள்ளார். பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. பாரதி மது, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால் பாரதியை உதயசரண் அடித்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.