சென்னை: வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் இது வெறும் புரளி என தெரியவந்தது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார், மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் மீது வழக்கு பதிந்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீசை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை மத்திய குதப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வழக்குகள் அனைத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 13 பள்ளிகள் அளித்த புகாரிகளில் தனித்தனியாக வழக்கு பதியப்பட்ட நிலையில் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மெயில் நிறுவனத்துக்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. குற்றவாளியின் மின்னஞ்சல் மூலம், செல்போன் எண்ணை கேட்டு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.