சேலம்: தமிழ்நாட்டில் பல இடங்களில் தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் கோரிமேடு அருகே உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி கல்லக்குடியில் உள்ள பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கல்லக்குடியில் உள்ள பள்ளியில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ஈரோட்டில் உள்ள தி இந்தியன் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது