வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் டெக்சாசின் ஆஸ்டினில் இருந்து ஜெட் விமானம் தரையிறங்கியது. அப்போது திடீரென விமான ஓடுதளத்தில் இருந்து விலகிய விமானம் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் சிலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டனர். விமானம் தரையிறங்கும்போது அதன் முதன்மை கியர் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று மிகப்பெரிய விமான விபத்துக்கள் நிகழ்ந்தது. இந்நிலையில் ஜெட் விமான விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.