சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த நபரை தாக்கி மோதலில் ஈடுப்பட்டனர். மக்களுக்கு இடையூறாக நின்ற மாணவர்களை அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் ஒரமாக நிற்குமாறு கூறியுள்ளார். ஓரமாக நிற்கக் கூறிய நபரை கல்லூரிக்குள் அழைத்துச் சென்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி அருகே வந்த வாகனத்தையும் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.