சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கல்யாணி பகுதியைச் சேர்ந்த சரவணன்-ரேவதி தம்பதியின் மகள் கோபிகா (17). இவர் நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில், ஓட்டல் மேனேஜ்மென்ட் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை கல்லூரி நிர்வாகம், 3 மாத பயிற்சிக்காக கொல்லிமலை சேலூர்நாடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அனுப்பியது. அங்கு தோழி கவுசல்யாவுடன் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், விடுதி கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்த கோபிகாவை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.