புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது, அதேப்போன்று திகார் சிறையில் உடன் இருந்த இரு தொழிலதிபர்களுக்கு ஜாமீன் வாங்கி தருவதாக ஆசை காட்டி, அவர்களது குடும்பத்தாரின் மனைவிகளிடம் இருந்து ரூ.200 கோடி பெற்று மோசடி செய்தது உட்பட ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மண்டோலி சிறையில் இருந்து தன்னை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஏதாவது சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் பி.எம்.திரிவேதி மற்றும் பி.பி.வரேலே ஆகியோர் அமர்வில் வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘சிறை மாற்றம் செய்யக்கோரி மனுதாரர் இதோடு நான்காவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறார். இதுபோன்ற நடவடிக்கைக்கு நாங்கள் அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். அப்போது சுகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோப் ஆலமின், வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ மனுதாரர் இனிமேல் சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கக் கூடாது’’என்று எச்சரித்து வழக்கை முடித்து வைத்தனர்.
சிறை மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து மனு செய்வதா? சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
0