சென்னை: சென்னை புழல்சிறை காவலர் ஹரிஹரன்(48) மதுபோதையில் ஆம்புலன்ஸை ஒட்டி எதிரே வந்த வேன்மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை, புழல் சிறை நோக்கி காவலர் ஹரிஹரன் ஒட்டி வந்துள்ளார். ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சிறை ஆம்புலன்ஸ், எதிரே வந்த டூரிஸ்ட் வேன் மீது மோதியுள்ளது. போதை தெளிந்த உடன் காவல் நிலையம் வருமாறு சிறை காவலர் ஹரிஹரனுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.